பழைய நோட்டுகளை மாற்றும் போது, கள்ள நோட்டுகள் கலப்பதாக புகார்கள் எழுந்துள்ளதால், அனைத்து ரூபாய் நோட்டுகளையும் சோதனைக்கு உட்படுத்தும்படி, வங்கி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பணத்தில், 83 சதவீதம், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் என்பதால், தற்போது அந்த நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு
அறிவித்ததும், பொதுமக்களிடம் பணப்புழக்கம் முடங்கியுள்ளது. வங்கிகளில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் பணி துவங்கி, இரண்டு நாட்களாகிறது.
இந்நிலையில், இந்த அவசர காலத்தை பயன்படுத்தி, கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பல், களமிறங்கி உள்ளதாக, வங்கி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன. சில வங்கிகளில், இரண்டு நாட்களில், சில கள்ள நோட்டுகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன. இதையடுத்து, அனைத்து வங்கி மேலாளர்களும், மண்டல அதிகாரிகளும் தங்கள் வங்கி கிளை ஊழியர்களுக்கு, சில அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில், பழைய ரூபாய் நோட்டுகளை, கள்ள நோட்டு கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்யாமல், புதிய நோட்டுகள் வழங்க வேண்டாம். கணக்கு வைத்திருப்போர், தெரிந்தவர்கள் என, யாரையும் நம்பி, பழைய நோட்டை சோதிக்காமல், மாற்றித் தர வேண்டாம் என, தெரிவித்துள்ளனர்.