அரசு துறை­களில் மின்­னணு பரி­வர்த்­தனை ரூ.1,000 கோடியை தாண்­டி­யது !!

இந்­தாண்டு, மத்­திய, மாநில அரசு துறை­களில், 1,000 கோடி ரூபாய்க்கும் அதி­க­மாக, மின்­னணு முறையில் பரி­வர்த்­தனை நடை­பெற்று உள்­ளது என, மின்­னணு மற்றும் தகவல் தொழில்­நுட்ப அமைச்­சகம் தெரி­வித்து உள்­ளது.
இது குறித்து, மத்­திய தகவல் தொழில்­நுட்பத் துறை செயலர், அருணா சுந்­த­ர­ராஜன் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:மத்­திய அரசு, அனைத்து அரசு துறை­க­
ளிலும் மின்­னணு சார்ந்த நடை­மு­றை­களை செயல்­ப­டுத்­து­வதில் தீவி­ர­மாக உள்­ளது. அது போல, மக்­களும், பணப் பரி­வர்த்­தனை உள்­ளிட்ட, அனைத்து சேவை­க­ளையும் மின்­னணு முறையில் பெற வேண்டும் என, அரசு வலி­யு­றுத்தி வரு­கி­றது.
இதற்கு, அரசு துறைகள் அனைத்­திலும், மின்­னணு நிர்­வாகச் சேவை­களை விரி­வு­ப­டுத்த வேண்­டி­யது அவ­சியம்; அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன் விளை­வாக, அரசு துறை­களில், இந்­தாண்டு, விவ­சாயம், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு, தொலை தொடர்பு, போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட துறை­களில், மின்­னணு சார்ந்த செயல்­பா­டுகள் மூலம் மேற்­கொள்­ளப்­பட்ட பணப் பரி­மாற்றம், 33 சத­வீதம் அதி­க­ரித்து, 1,000 கோடி ரூபாயை தாண்­டி­யுள்­ளது.
கடந்த, 2015 மற்றும் 2014ம் ஆண்­டு­ களில், மின்­னணு சார்ந்த பரி­வர்த்­த­னை­களின் மதிப்பு, முறையே, 760 கோடி ரூபாய் மற்றும் 350 கோடி ரூபா­யாக இருந்­தது. இந்­தாண்டு, மின்­னணு பரி­வர்த்­த­னையில், முதல் ஐந்து இடங்­களை, தெலுங்­கானா, குஜராத், கேரளா, ஆந்­திரா, தமி­ழகம் ஆகிய மாநி­லங்கள் பிடித்­துள்­ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...