கருப்பு பண ஒழிப்பு பயனை விரைவில் அடையப் போகிறோம்: பியூஸ் கோயல் !!

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் அதன் பயனை விரைவில் அடையப்போகிறோம். கருப்பு பண ஒழிப்பின் ஆதாயம் ஏழை மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிடப்படும் என மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

பெங்களூரு ஐ.ஐ.எம்.மில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மின்சார துறை அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை முழுக்க, முழுக்க நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் எடுக்கப்பட்டது. நாம் கருப்பு பணத்தை ஒழித்த பயனை விரைவில் அடையப் போகிறோம். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் மூலம் கிடைக்கும் ஆதாயம் மக்களுடன் பகிரப்படும்.



திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு





குறிப்பாக ஏழை மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு உதவும். இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரு சில மூத்த நிர்வாகிகளை தவிர மற்றவர்கள் இந்த திட்டத்தை வரவேற்கின்றனர். மோடியின் அறிவிப்பை நாடு முழுவதும் ஏராளமான மக்கள் வரவேற்றுள்ளனர் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...