மது விற்றால் 10 ஆண்டு சிறை : குஜராத் அரசு அதிரடி !!

குஜராத்தில் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. பூரண மதுவிலக்கு அமலில் உள்ள இந்த மாநிலத்தில் சமீபத்தில் மதுபானம் பதுக்கல், விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு அரசு அதிகாரிகள் சிலர் துணைபோகின்றனர். இதை தடுக்கும் வகையில், ஏற்கனவே உள்ள மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று

நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் சட்டதிருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.திருட்டுத்தனமாக மது விற்பனை செய்வது, அண்டை மாநிலங்களில் இருந்து மதுவை கடத்தி வருவது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு முன்பு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், மது கடத்தலுக்கு உதவி செய்யும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலும் விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...