இதுகுறித்து, தேடல் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தருமான, எம்.பாஸ்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அண்ணா பல்கலைக்கு புதிய துணை வேந்தரை நியமிக்க, திறந்தநிலை பல்கலை துணை வேந்தர்
எம்.பாஸ்கரன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹேமந்த்குமார் சின்கா, தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் ஆகியோர் இடம்பெற்ற தேடல் குழுவை, கவர்னர் அமைத்துள்ளார்.
புதிய துணைவேந்தரை, தேடல் குழு தேர்வு செய்ய உள்ளது. எனவே, இந்த பதவிக்கு தகுதியானவர்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தங்கள் முழு விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 2017 ஜன., 10 மாலை, 5:00 மணிக்குள், தபாலில் வந்து சேர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.