சரக்கு, சேவை வரியால் (ஜி.எஸ்.டி.,) பொருட்களின் உண்மையான விலை, அதற்கான வரி எவ்வளவு என்பதை அறிய முடியும்,' என மதுரை மாவட்ட வைரம், தங்கம் மற்றும் வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி., பற்றி மதுரையில் நடந்த இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேலு வரவேற்றார்.
ஜி.எஸ்.டி., பற்றி புனே பிஸால் இந்தியா சர்வீசஸ் துணைத் தலைவர் அசோக் பி.நவால் பேசியதாவது:
வியாபாரம், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்த, ஜி.எஸ்.டி., மற்றும் பண மதிப்பிழப்பு உட்பட முக்கிய நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி, படிப்படியாக 2 ஆண்டுகளில் கொண்டு வந்துள்ளார்.
ஜி.எஸ்.டி., ஏப்.,1 முதல் அமலாகிறது. இதற்கேற்ப ஜன.,1 முதல் ஜி.எஸ்.டி., பதிவிற்கு தயாராக வேண்டும். அதற்கேற்ப கணக்குகளை தாமதமின்றி, அந்தந்த மாதங்களிலேயே முடிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி.,யால் பொருட்களின் உண்மையான விலை, அதற்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்பதை தெளிவாக அறிய முடியும்.
சரக்கு, சேவை உள்ளே வரும் விபரங்கள், ஜி.எஸ்.டி., ஆன்லைனில் 15 தேதிக்குள் பதிவு செய்யப்படும். சரக்கு, சேவை வெளியேறுவதை 10 ம் தேதிக்குள் நாமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
20 லட்சம் ரூபாய்க்கு கீழ் வியாபாரம் செய்தால், அதை ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யத் தேவையில்லை. வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு 'இன்வாய்ஸ்' பதிவு செய்யும்போது, ஜி.எஸ்.டி., விதிக்கப்படும். பதிவு செய்யப்படாத வாடிக்கையாளரிடம், பொருளை வாங்கும்போது அதற்கு நாம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும், என்றார்.
கவுரவ பொதுச்செயலாளர் கண்ணன், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.