கடந்த இரண்டு மாதங்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று இரவு11.30 மணியளவில் இயற்கை எய்தினார். இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் இறுதிச்சடங்கு நடக்கவுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் மீது அளவுக்கதிகமாக அன்புகொண்ட சில தொண்டர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,கோவையில் அதிமுக தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த 45 வயது அதிமுக தொண்டர் ராமச்சந்திரன் என்பவர் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புகுறித்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, முதல்வரின் இறப்பைத் தாங்கமுடியாத அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்ற தகவல் வெளியானது. இதைக்கேட்ட இரண்டு பெண் உள்பட 11 பேர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளனர். பழனியம்மாள், ராசப்பன், ராஜூ, சுசீலா, நீலகண்டன், தங்கராசு, சாமுண்டி, பெரியசாமி, ராமையா, சிவப்பிரகாசம், ஜெயராமன் ஆகியோர் முதல்வரின் உடல்நிலை குறித்த செய்தியைக் கேட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.