சுனாமி: இன்று 12ஆம் ஆண்டு நினைவு தினம்!

லட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்ட சுனாமி பேரழிவின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு, டிசம்பர் 26ஆம் தேதி இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. சுனாமி
பேரழிவில் 2,26,000 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்தன. 11 ஆண்டுகள் கடந்த நிலையில் சுனாமி ஏற்படுத்திய சுவடு மட்டும் இன்னும் மறையாமல் உள்ளது.

தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி உட்பட அனைத்து கடலோர மாவட்டங்களும் சுனாமி பேரலைக்கு இரையாகியது. அந்த ஆழிப் பேரலையில் சிக்கிய இறந்தவர்களுக்கு அவர்களது உறவினர்களும், நண்பர்களும் கடற்கரை பகுதிக்கு சென்று, கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்து வருகின்றனர். அதேபோல் அனைத்து கட்சியினர் சார்பிலும், அரசு சார்பிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

சுனாமி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 5ஆம் தேதி ‘உலக சுனாமி விழிப்புணர்வு’ தினமாக அனுசரிக்க ஐக்கிய நாடுகள் அவையில் கடந்த 2015 டிசம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் படி, முதல் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் நவம்பர் 5 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...