இன்று தொடங்குகிறது அதிரடி ரெய்டு?

ஹைதராபாத்திலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் பெருமளவில் வந்து சேர்ந்துள்ளார்கள். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் வருமான வரி புலனாய்வுப் பிரிவு இயக்குநர் பவன் குமார் தலைமையில் தீவிர ஆலோசனைக் கூட்டம் நடந்ததுள்ளது.



இந்தக் கூட்டத்தில் அடுத்தடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், அடுத்த கட்ட ரெய்டு குறித்து பேசப்பட்டதாகவும் பரவலாக பேசப்படுகிறது. மேலும் இன்று முதல் வருமான வரி சோதனைகள் முடுக்கி விடப்படும் நிலையில் நடைபெறப் போகும் அதிரடி ரெய்டுகளில் சிக்கப் போவது யார் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக ஹைதராபாத்திலிருந்து வந்துள்ள 60-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 150 அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இன்று முதல் இவர்கள் எங்கெங்கு ரெய்டு நடத்த வேண்டும் என்ற திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரெய்டின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இன்று முதல் ரெய்டு நடத்தப்பட வேண்டிய இடங்கள் குறித்த பட்டியலும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...