உலகம் முழுவதும், 2,000 ரூபாய்க்கும் குறைவான விலையில், நோக்கியா போன்களை விற்பனைக்கு வெளியிட உள்ளது, எச்.எம்.டி., குளோபல் நிறுவனம். மேலும், வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் அதே நாளில், இந்தியாவிலும் இந்த போன்கள் விற்பனைக்கு வர உள்ளன.
நோக்கியாவின் மொபைல் போன் மற்றும் டேப்லட் ஆகியவற்றை விற்பனை செய்யும் உரிமத்தை, எச்.எம்.டி., குளோபல் எனும் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம், முதற்கட்டமாக, 2,000 ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட, ‘நோக்கியா 150, நோக்கியா 150 டுயல் சிம்’ எனும், இரு மொபைல் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த போன்கள், 2.4 இஞ்ச் திரை, எப்.எம்., – எம்.பி.3., வசதி, மொபைல் கேம் ஆகிய அம்சங்கள் கொண்டதாக இருக்கும்; 2017 மார்ச்சுக்குள் அறிமுகமாகும்’ என்றார்.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், ஜூலை – செப்., வரையிலான காலத்தில், இந்தியாவில், ஒட்டுமொத்த மொபைல் போன்கள் விற்பனை, 18.1 சதவீதம் அதிகரித்து, 7.23 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.