வங்க கடல் பகுதியை கலக்கிய, 'வர்தா' புயல், காற்றழுத்த தாழ்வு பகுதியாக, அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த பகுதி, மீண்டும், அந்தமானுக்கு தெற்கே, புறப்பட்ட இடத்திற்கே வருமா என, கண்காணிக்கப்படுகிறது.
வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான, 'ரோஜா' என்ற பொருளுடைய, வர்தா புயல், அந்தமானில் துவங்கி, தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா
மாநிலங்களை பதம் பார்த்தது. இந்த மாநிலங்கள் மட்டுமின்றி, கர்நாடகாவி லும், பலத்த மழையை கொடுத்தது.பின், மேகக் கூட்டமாக விலகிய வர்தா, அரபிக் கடலில் சென்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ளது. எனவே, வடகிழக்கில் இருந்து, வங்க கடலுக்குள் வீசும்காற்று, வலுவாக சுழன்று கொண்டிருக்கும் வர்தா, காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஈர்க்கப்படுகிறது.
அதனால், வங்கக் கடலில் இருந்து, சென்னை வழியே மேற்கு நோக்கி செல்லும் காற்று, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியே, அரபிக்கடலுக்குள் சென்று, வர்தாவுடன் சேர்ந்து சுழல்கிறது.
இந்த சுழற்சி, மேலும் மேகக் கூட்டங்களை சேர்த் தால், வர்தா காற்றழுத்த தாழ்வு பகுதிவலுப் பெற்று, தமிழகத்தின் தென் பகுதி வழியே, புயல் புறப்பட்ட இடமான, அந்தமானுக்கு வரவும் வாய்ப் புள்ளது. இதனால், அரபிக் கட லில் சுழலும் வர்தாவை கண்காணித்து வருவ தாக, வானிலை கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள, மண்டல வானிலை மைய இயக்குனர், எஸ்.பாலச்சந்திரன் கூறுகை யில், 'நான்கு மாநிலங்களை தாண்டிய வர்தா, அரபிக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மையம் கொண்டுள்ளது.
தமிழகத்தில், ஓரிரு இடங்களில், மூன்று நாட்களுக்கு, லேசான மழை இருக்கும்' என்றார்.