அடையாளம் தெரியாதவர்களிடம், கட்சிகள் ரூ.2 ஆயிரம் மற்றும் அதற்கு மேல், வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தலின் போது கட்சிகள் கறுப்பு பணம் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த கோரிக்கை விடுத்துள்ளது.அடையாளம் தெரியாதநபர்கள் அளிக்கும் நன்கொடையை கட்சிகள் ஏற்பதை தடுப்பதற்கு சட்டத்தில் எந்த வாய்ப்புமில்லை. ஆனால், மக்கள்
பிரதிநித்துவ சட்டம் 29 சின் படி, அவ்வாறு வாங்கப்படும் பணம் குறித்து கட்சிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். அதுவும் ரூ.20 ஆயிரம் மேல் நன்கொடை பெற்றால் தேர்தல் கமிஷனுக்கு தகவல் அளிக்க வேண்டும். இந்த நேரத்தில், தேர்தல் சீர்திருத்தம் அடிப்படையில், மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரையில், அடையாளம் தெரியாத நபர்களிடம் ரூ. 2 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் நன்கொடை வசூலிக்க கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். லோக்சபா மற்றும் சட்டபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் கட்சிகளுக்கு மட்டுமே வருமான வரிவிலக்கு அளிக்க வேண்டும். கடந்த 1996ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நன்கொடை அளிக்கும் நபர்களை பதிவு செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது