ஆதாருக்கு எப்பவும் உதாரு! இப்போதைக்கு நிறைவு பெறாது 'ஆதார்' இணைப்பு மழுப்பும் ஊழியர்களால் தொடரும் பாதிப்பு!!!

சர்வர் வேலை செய்யலீங்க... மெஷின்ல சார்ஜூம் இல்லீங்க... போயிட்டு மத்தியானத்துக்கு மேல வாங்க!' இதுதான் இன்று, கோவையில் பல ரேஷன் கடைகளில் ஆதார் பதிவுக்கு செல்பவர்களிடம் ஊழியர் கூறும் 'டயலாக்'. ஆனால், ஏதோ பொதுமக்கள் தான் ஆதார் பதிவுக்கு செல்வதில்லை என்பது போன்ற தோற்றத்தை

ஏற்படுத்தும் மாவட்ட வழங்கல் துறை, ரேஷன் கார்டுகளை ரத்து செய்யப் போவதாக பயமுறுத்தி வருகிறது.



சில ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கேரளாவுக்கு ரயில்களிலும், லாரிகளிலும் இலவச அரிசி கடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவுடன் கடத்தல் நடப்பதால், தடுப்பு நடவடிக்கைகள் பெரியளவில் பலன் அளிப்பதில்லை.



ரேஷன் பொருள் வினியோகத்தை முறைப்படுத்துவது மட்டுமல்லாமல், போலி ரேஷன் கார்டுதாரர்களை ஒழிப்பதன் வாயிலாக, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு, ஆதார் எண்களை ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வலியுறுத்தி வருகிறது.



இதற்கென அனைத்து ரேஷன் கடைகளிலும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை இயக்கும் தொழில்நுட்பம் குறித்து, சில ரேஷன் கடை ஊழியர்களுக்கு தெரியவில்லை. இதனால் பதிவு மந்தமாகவே நடக்கிறது. பெரும்பாலான கடைகளில் காலை வேளைகளில் ஆதார் எண் பதிவு நடப்பதில்லை.



இதனிடையே ஆதார் எண்ணை பதிவு செய்யாதவர்களின் ரேஷன் கார்டை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக, வெளியாகியுள்ள தகவல், கார்டுதாரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள, ரேஷன் கடையில் ஆதார் கார்டு பதிவுக்கு வந்த ஒருவர் கூறுகையில், 'ஆதார் கார்டு பதிவுக்காக, இதுவரை ஆறு தடவை இங்கு வந்து விட்டேன். சிக்னல் தகராறு, சர்வர் வேலை செய்யவில்லை, மெஷினில் சார்ஜ் இல்லை... இப்படி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, அலைக்கழிக்கின்றனர். ஊழியர்களுக்கு இது குறித்து முதலில் பயிற்சி அளிக்க வேண்டும்' என புலம்பித்தள்ளினார்.

மற்றொருவர் கூறுகையில், 'ஆதார் எண் இணைத்து விட்டால், ரேஷன் பொருட்கள் இருப்பும், விற்பனையும் முறைப்படுத்தப்பட்டு விடும். அதன் பிறகு கள்ள மார்க்கெட்டில் விற்க முடியாது. ஆகவே, பல்வேறு காரணங்களை கூறி வேண்டுமென்றே அலைய வைக்கின்றனர். ரேஷன் பொருள் எதுவும் வாங்காமலே, பலரது கார்டுகளுக்கு 'எஸ்.எம்.எஸ்.', வருவது இதனால் தான்' என்றார்.

ரேஷன் கடை ஊழியர் ஒருவரிடம் கேட்டதற்கு, 'காலை வேளையில் ரேஷன் பொருளும் வினியோகிக்க வேண்டும்; ஆதாரும் இணைக்க வேண்டும் என்பதால், வேலைப்பளு காரணமாக பிற்பகலில் வரச் சொல்கிறோம். வருவதாக கூறிச் செல்பவர்கள் வருவதில்லை. நாங்கள் என்ன செய்வது?' என்றார்.

தொழில்நுட்ப அறிவு இல்லாத சில ஊழியர்கள், பாயின்ட் ஆப் சேல் கருவியை இயக்க, கல்லுாரி மாணவ, மாணவியரை வேலைக்கு வைத்துள்ளனர். காலை வேளைகளில் அவர்கள் கல்லுாரிக்கு சென்று விடுவதால், பதிவு நடப்பதில்லை. தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ள, ஊழியர்களும் விரும்புவதில்லை. இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் ஆதார் எண் மற்றும் மொபைல் போன் எண்களை பதிவு செய்த ரேஷன் கார்டுகளை, ரத்து செய்யப் போவதாக வழங்கல் துறை அலுவலகத்தில் பேச்சு அடிபடுகிறது.

ஆதலால், ஆதார் எண் இணைக்கும் திட்டம், வெற்றி பெற தனியாக ஊழியரை நியமிக்க வேண்டும்; அல்லது ஊழியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்க வேண்டும். அதுவரை ஆதார் எண் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்பதே, அலைந்து களைத்துப் போன பொதுமக்களின் குரல்.இதுகுறித்து கேட்க, மாவட்ட வழங்கல் அலுவலரை பலமுறை தொடர்பு கொண்டும், 'அட்டெண்ட்' செய்யவில்லை.

சில்லரைக்கு காபி பவுடர்!

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சில்லரை தட்டுப்பாடு, ரேஷன் கடைகளையும் விட்டு வைக்கவில்லை. பல ரேஷன் கடைகளில், கடும் சில்லரை தட்டுப்பாடு நிலவுகிறது. சில கடைகளில், பாக்கியை அடுத்தமுறை வரும்போது வாங்கிக் கொள்ளுமாறு, துண்டுச்சீட்டில் எழுதித் தருகின்றனர். வேறு சில ஊழியர்கள் புத்திசாலித்தனமாக, சில்லரைக்கு பதிலாக காபித்துாள் பாக்கெட்டுகளை தலையில் கட்டி விடுகின்றனர். கடைகளில் ஐம்பது காசு, ஒரு ரூபாய்க்கு பதிலாக, சாக்லேட் கொடுத்தாலே உஷ்ணம் அடையும் நம்மூர் மக்கள், காபித்துாள் பாக்கெட்டை வேறு வழியின்றி வாங்கிச் செல்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...