ரூ.2,378 கோடி மதிப்பில் ஜெ., அறிவித்தவை...தெரியவில்லை அறிகுறி: திட்டங்கள் கேள்விக்குறி! மூன்றாண்டுகளாகியும் துவங்காமல் இழுத்தடிப்பு!!

முன்னாள் முதல்வர் ஜெ., மறைந்து விட்டதால், அவரால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் எதிர்காலம் குறித்து, கேள்வி எழுந்துள்ளது; அவரது நினைவாக இந்த திட்டங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.





தமிழகத்திலேயே அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டையாக, கோவை உள்ளது. மாநிலத்தின் வேறு பகுதிகளில் உள்ள மக்கள், தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி ஓட்டளித்து

வந்தாலும், கோவை மக்கள் கடந்த கால் நுாற்றாண்டு காலமாக, அ.தி.மு.க.,வைத் தவிர வேறு

எந்தக் கட்சியையும் இங்கு ஜெயிக்க விட்டதில்லை. அதற்கு நன்றி உபகாரமாக, இந்த நகருக்கென பல சிறப்புத் திட்டங்களும், அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டன.



தானாய் வளர்ந்த நகரம்

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய தொழில் நகரமாக உள்ள கோவை, ஜவுளித்தொழில், பம்ப்செட், கிரைண்டர், காஸ்டிங், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், இன்ஜினியரிங் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் உலகளவில் சிறந்து விளங்குகிறது. அரசின் உதவி அதிகம் இல்லாமல், தனியார் தொழில்துறையினரால் வளர்ந்த நகரம் என்ற பெருமை, கோவைக்கு இருக்கிறது.



தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர், கோவையில் தங்கி, பணியாற்றி வருகின்றனர். இதனால், ஆண்டிற்கு ஆண்டு இந்த நகரின் மக்கள் தொகையும் பெருகி வருகிறது.



இதன் காரணமாக, இந்த நகரின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதை உணர்ந்தே, கோவை நகருக்கென 2,378 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை ஜெ., கடந்த 2014ம் ஆண்டில் அறிவித்தார்.



அருமையான திட்டங்கள்

கோவை மேயர் இடைத்தேர்தலின்போது, அவர் வெளியிட்ட அந்த அறிவிப்பில், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், லாரிப்பேட்டை, சங்கனுார் பள்ளம் மீதான அரை வட்டச்சாலை, விரிவாக்கப்பகுதிகளில் மழை நீர் வடிகால் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அருமையான திட்டங்களும் இடம் பெற்றிருந்தன.



இவை மட்டுமின்றி, தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காந்திபுரம் மேம்பாலம் திட்டத்துக்கும், ஜெ., நிதி ஒதுக்கீடு செய்தார். புதிய கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி., ஆபீஸ் கட்டவும் உத்தரவிட்டார்.

இவற்றில், மேம்பாலம் கட்டும் பணி, முடியும்தறுவாயில் உள்ளது; கலெக்டர், எஸ்.பி., ஆபீஸ்

கட்டடங்களும் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இவை திறக்கப்படுவதற்குள் ஜெ., மறைந்து விட்டது, ஆளுங்கட்சியினரை மட்டுமின்றி, கோவை மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.



இதன் திறப்பு விழா கல்வெட்டுக்களில், ஜெ., பெயர் இடம் பெற வேண்டுமென்பதே, இவர்களின் விருப்பமாக உள்ளது.அதேபோன்று, அவரால் கோவைக்கென அறிவிக்கப்பட்ட பிற திட்டங்களும், மூன்றாண்டுகளாகியும் இன்னும் துவக்கப்படவில்லை. இவை துவக்கப்படுவதற்கான அறிகுறிகளும் தெரியாமல் இருப்பதால், இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது.



ஜெ., அறிவித்த இத்திட்டங்களை, விரைவாக நிறைவேற்றி, அவரது பெயரையே அவற்றுக்குச் சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையும்தொழில் துறையினர் மற்றும் பொது மக்கள் மத்தியில்

வலுத்துள்ளது.



அதிகாரிகளே காரணம்!

இந்த திட்டங்கள் மட்டுமின்றி, மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட 'மல்டி லெவல் பார்க்கிங்', தி.மு.க., ஆட்சியில் துவங்கிய விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளன.



இவற்றை நிறைவேற்றுவதில், இங்குள்ள அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆர்வமாய் இருந்தாலும், அதைச் செயல்படுத்துவதற்குத் தகுதியான, திறமையான அதிகாரிகள் இங்கு இல்லை. எனவே, நல்ல அதிகாரிகளை நியமித்து, திட்டங்களை சீக்கிரம் நிறைவேற்றுவதே, தமிழக அரசின் தார்மீகக்கடமையாகும்.



கோவைக்கு நன்றிக்கடன்!

தமிழ்நாடு குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், ''தான் அறிவித்த திட்டங்களை, எப்படியும் நிறைவேற்ற வேண்டுமென்பதில் பெரிதும் அக்கறை காட்டியவர் ஜெ.,. கோவை மக்கள் அவருக்கு காலம் காலமாக கொடுத்து வந்த ஆதரவுக்கு நன்றிக்கடனாகவே, 2,378 கோடி ரூபாயில் திட்டங்களை அறிவித்தார். அவற்றை உரிய முறையில் நிறைவேற்றி தருவதே அவருக்கு செலுத்தும் மரியாதையாகும். இதை இங்குள்ள மக்கள்

பிரதிநிதிகளும், தமிழக அரசு அதிகாரிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...