மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யப்படாத கார்டுகளுக்கு உணவுப்பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மாவட்டத்தில் 9.50 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் 1386 ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படுகின்றன. போலி ரேஷன் கார்டு புழக்கத்தை ஒழிக்கும் வகையில், ரேஷன் கடைகளில் ஆதார் மற்றும் அலைபேசி எண்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதற்காக ரேஷன் கடைகளுக்கு 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டது. இதன்படி 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஆதார் மற்றும் அலைபேசி எண்களை பதிவு செய்து விட்டனர். மற்றவர்கள் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாதவர்களுக்கு இம்மாதம் உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை.
இதற்கிடையில் ஏற்கனவே ஆதார் மற்றும் அலைபேசி எண் பதிவு செய்தவர்களுக்கும் உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை. ஆதார் கார்டு ஆன்லைனில் பதவிறக்கம் செய்த பலர் ரேஷன் கடைகளில் பதிவு செய்ய சென்றனர். ஆனால் அவர்களுக்கு 'பி.ஒ.எஸ்.,' கருவியில் பதிவு செய்ய முடியவில்லை. குடும்ப தலைவர் ஆதார் எண் பதிவு செய்யாததை காட்டியும் உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை.
மேலும் இடம் மாறிய நுகர்வோர், முன்பு பொருட்கள் வாங்கிய ரேஷன் கடைகளில் ஆதார் எண்களை பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு புதிய இடத்திற்குட்பட்ட கடைகளிலும் உணவுப்பொருட்களை வழங்கப்படவில்லை. இதுபோன்ற குளறுபடிகளால் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கும், ஊழியர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் வீரராகவராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் 80 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவது இந்த மாதம் நிறுத்தப்பட்டுள்ளது. ரேஷன்கடை ஊழியர்கள், ''தொடர்ந்து ஆதார் மற்றும் அலைபேசி எண்களை பதிவு செய்து வருகிறோம். கடந்த மாதம் வரை பதியாதவர் விபரங்களை பெற்று உணவுப்பொருட்கள் வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்,'' என்றனர்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன்கார்டுகளில் இறந்தவர் பெயர் நீக்கப்படவில்லை. போலி ரேஷன் கார்டுகள் பழக்கத்தில் உள்ளன. இந்த முறைகேடுகளை தவிர்க்க ஆதார் மற்றும் அலைபேசி எண்களை பதிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் விரைந்து பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஸ்மார்டு கார்டு வழங்க முடியும், என்றார்.