வருமான வரித்துறை சோதனைகள்மூலம் ரூ.2,600 கோடி கருப்பு பணம், கணக்கில் வந்தது!!

புதுடெல்லி, வருமான வரித்துறை சோதனைகள் மூலம் கணக்கில் காட்டப்படாத ரூ.2,600 கோடி கருப்பு பணம், கணக்கில் வந்துள்ளது.ரூ.393 கோடி சிக்கியது



மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–நவம்பர் 8–ந்தேதி உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தி வருகிறது.291 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி உள்ளது. 295 விவகாரங்களில் கணக்கெடுப்பு நடவடிக்கை நடத்தப்படுகிறது. இவற்றைத் தவிர 3 ஆயிரம் விவகாரங்களில், விசாரணை நடைபெற்று வருகிறது.வருமான வரித்துறை சோதனைகளில் ரூ.393 கோடி சிக்கியுள்ளது. அதில் ரூ.316 கோடி ரொக்க பணமாகும். மீதி ரூ.77 கோடி மதிப்பிலான நகைகள் கைப்பற்றப்பட்டன.ரூ.80 கோடி புதிய நோட்டுகள்

ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதில், ரூ.80 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளும் அடங்கும். ஒட்டுமொத்தத்தில் கணக்கில் காட்டாத ரூ.2,600 கோடி கணக்கில் வந்துள்ளது.அனைத்து வங்கி கணக்குகளில் இருந்தும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்கள் திரட்டிக்கொண்டிருக்கிறது. கையில் இருக்கிற வருமான வரி கணக்கு விவரங்களுடன் அவை ஆய்வு செய்யப்படுகின்றன. எனவே தங்கள் வங்கிக்கணக்குகளில் செய்யப்படுகிற டெபாசிட்டுகள் கண்காணிக்கப்படுகின்றன என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.வங்கிக்கணக்குகளில் செய்யப்படுகிற டெபாசிட்டுகள் அடிப்படையில், 3 ஆயிரம் நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.பான் எண்கள்

வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா கூறும்போது, ‘‘ஒரு மாத காலத்தில் ஜன்தன் வங்கிக்கணக்குகள் தவிர்த்து பிற வங்கிக்கணக்குகள் அனைத்திலும் பான் எண்களை திரட்டி விடுவோம்’’ என்று குறிப்பிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...