கர்நாடக அரசு அதிகாரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி புதிய நோட்டுகள் எங்கிருந்து மாற்றப்பட்டு வந்தது என்று விசாரணை செய்தபோது அவை, ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகத்தின் மூலமாக பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகளை அதிகளவில் மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் ஈரோட்டுக்கு வந்து நேரில் விசாரணை செய்தபோது அதில், ரூ.1150 கோடி பணமானது மொத்தம் 27
வங்கிகளின் மூலம் புதிய நோட்டுகளாக மாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி நிறுவனத்தில், ஈரோட்டில் உள்ள வங்கிகளில் ரூ.1150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருக்குமா என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 27 வங்கிகளில் வருமான வரித்துறையினரும் வங்கி அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த 10ஆம் தேதிக்கு மேல், ஈரோட்டில் உள்ள வங்கிகளில் நடந்த பணப்பரிவர்த்தனைகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு வங்கியிலும் யார், யாருக்கு எவ்வளவு பணம், யாருடைய வங்கிக்கணக்கில் இருந்து செலுத்தப்பட்டது மற்றும் பெறப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த அதிரடி ஆய்வு அமைச்சர் தரப்பை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த விசாரணையின் முடிவில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.