பெயர் தெரிவிக்காதவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.தேர்தல்களில் கருப்பு பணம்
சமீப காலமாக தேர்தல்களின்போது கருப்பு பணம் தாராளமாக விளையாடுகிறது. கருப்பு பணத்தை வாக்காளர்களுக்கு லஞ்சமாக தந்து, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஓட்டு வாங்குகிற நிலையும் காணப்படுகிறது. அரசியல்வாதிகளிடம் உள்ள கருப்பு பணமும், நன்கொடையாகப் பெறுகிற நிதிகளும் இதற்கு பக்க பலமாக திகழ்கின்றன.இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்புகிறது.சட்ட தடை இல்லை
அதே நேரத்தில் அரசியல் கட்சிகள் அனுப்பியவரின் பெயர் கூறாமல், வருகிற நிதி நன்கொடைகளை பெறுவதற்கு அரசியல் சாசனமோ, பிற சட்டங்களோ எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை.ஆனால், 1951–ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 29 சி, இப்படி வருகிற ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட நன்கொடைகள் குறித்து சுய பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று மட்டுமே கூறி உள்ளது.தேர்தல் கமிஷன் சிபாரிசு
இந்தநிலையில் அரசியல் கட்சிகள் பெயர் தெரிவிக்காதவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நிதியாக நன்கொடை பெறுவதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.மேலும், சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறுகிற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.வருமான வரி சட்டம் பிரிவு 13–ஏ, அரசியல் கட்சிகளுக்கு வீடு போன்ற சொத்துகள், நன்கொடைகள், மூலதன வருவாய்கள், பிற இனங்களில் வருகிற வருவாய் போன்றவற்றுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.சட்ட அமைச்சகம் உறுதி செய்ய...
கருப்பு பணத்தை ஒடுக்குவதற்கு மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் மற்றொரு பரிந்துரையையும் செய்துள்ளது.அது, அரசியல் கட்சிகள் கூப்பன் வெளியிட்டு பெறுகிற நன்கொடைகள் தொடர்பான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டின் 1996–ம் ஆண்டு உத்தரவின்படி பதிவு செய்வதை சட்ட அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பதாகும்.