நதிநீர் பங்கீடு பிரச்சினையை தீர்த்து வைக்க புதிய தீர்ப்பாயம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சட்ட திருத்த மசோதா அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.நதிநீர் பங்கீடு
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு ஆண்டுக்கணக்கில் இழுத்துக்கொண்டே போகிறது.தற்போது நதிநீர் பங்கீடு பிரச்சினையை தீர்த்துவைப்பதற்காக 8 நடுவர் மன்றங்கள்(தீர்ப்பாயங்கள்) செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கர்நாடகம்–தமிழ்நாடு, கோவா–கர்நாடகா–மராட்டியம், ஒடிசா மற்றும் சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களுக்கு இடையே நதிநீரை பங்கிட்டுக்கொள்வதில் சட்டரீதியான மோதல்கள் நடந்து வருகின்றன.சட்டதிருத்தம் தாக்கல்
இதையடுத்து தற்போதுள்ள அனைத்து தீர்ப்பாயங்களையும் ரத்து செய்துவிட்டு நதிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க புதிய தீர்ப்பாயம் அமைப்பது என மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.இதைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்காக 1956–ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. கடந்த வாரம் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.இந்த சட்ட திருத்த மசோதா அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.இதுபற்றி மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் சஷி சேகர் கூறியதாவது:–3 ஆண்டுக்குள் தீர்வு
புதிய தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் அமைக்கப்படும். தேவைப்பட்டால் இந்த தீர்ப்பாயத்துக்கு அமர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டால் இந்த அமர்வுகளின் பதவி காலம் முடிந்துவிடும்.புதிய தீர்ப்பாயம் 3 ஆண்டுக்குள் மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தீர்ப்பாயத்தை ஏற்படுத்துவதற்கான சட்ட திருத்த மசோதாவுடன், பிரச்சினைக்கு தீர்வு காணும் குழுவையும் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த குழுவில் நீர்வளத்துறை நிபுணர்கள், கொள்கைகளை உருவாக்குவோர் இடம் பெறுவர். இவர்கள் தீர்ப்பாயத்திற்கு செல்லும் முந்தைய நிலை வரை மாநிலங்களின் முறையீட்டை கையாள்வார்கள்.தானாக வந்துவிடும்
ஏதாவது ஒரு மாநிலம் பிரச்சினைக்கு தீர்வு காணும் குழுவை அமைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டால் மத்திய அரசு அதை அமைக்கும். பெரும்பாலான நதிநீர் பங்கீடு பிரச்சினை இந்த குழுக்களின் அளவிலேயே முடிந்துவிடும். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு காணும் குழுவின் முடிவை ஒரு மாநிலம் விரும்பாவிட்டால் அது புதிய தீர்ப்பாயத்தை அணுகலாம்.இதில் புதிய தீர்ப்பாயம் அளிக்கும் தீர்ப்பு தானாகவே நடைமுறைக்கு வந்து விடும். தற்போது இதுமாதிரியான நடைமுறை இல்லாததால்தான் நடுவர் மன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை அமல்படுத்துவதில் காலதாமதமாகி வருகிறது. தீர்ப்பாயத்துக்கு அதிக அதிகாரம் அளிப்பதற்காக இந்த சட்ட திருத்தத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.