கமிஷன் வாங்கும் கறுப்பு ஆடுகளை கண்காணிக்க கோரிக்கை:செல்லாத நோட்டுகளை முறைகேடாக மாற்றிய 4 பேர் 'டிஸ்மிஸ்!!!

வங்கி கிளைகள், ரிசர்வ் வங்கியில் புதிய ரூபாய் நோட்டுகள்... விற்பனை?:
வங்கிகளின் கிளைகள் மற்றும் ரிசர்வ் வங்கியில், புதிய ரூபாய் நோட்டுகள் விற்கப்படுவதாக, பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

பொது மக்களுக்காக வினியோகிக்கப்படும், புதிய ரூபாய் நோட்டுகளை, கமிஷனுக்காக கை மாற்றும் கறுப்பு ஆடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும்
கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையில், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிய, வங்கி மேலாளர் உள்ளிட்ட, நான்கு ஊழியர்களை, எச்.டி.எப்.சி., வங்கி, 'டிஸ்மிஸ்' செய்துள்ளது.

பொது மக்களின் தேவை கருதி, நாட்டில், நான்கு இடங்களில் உள்ள அச்சகங்களில் இருந்து, புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று, ரிசர்வ் வங்கி அனுப்பி வருகிறது. அந்த பணம் முழுவதும், பொது மக்களை சென்று சேருகிறதா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

சில அரசு மற்றும் ஓரிரு தனியார் வங்கிகளை தவிர்த்து, பெரும்பாலான வங்கிகளில், ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே தரப்படுகின்றன. பல வங்கி கிளைகளில்,பணம் தரப்படுவதே இல்லை. அதேநேரத்தில், 30 சதவீதம் கமிஷன் பெற்று, செல்லாத ரூபாய் நோட்டுக்கு பதிலாக, புதிய ரூபாய் நோட்டுகள் தரும் வேலைகள், திரைமறைவில் நடக்கின்றன. அதற்கு, சில தனியார் வங்கிகளும் உடந்தையாக உள்ளன.

அதிகாரிகள் கைது


நவ., 21ம் தேதி, சென்னை, சாஸ்திரி நகர்,
ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு வங்கி காசாளர்; , ஆக்சிஸ் வங்கியின் நங்கநல்லுார் மற்றும் வேளச்சேரி கிளை அதிகாரிகள் என, ஐந்து பேர் 25 லட்சம் ரூபாயை, கமிஷனுக்காக மாற்றிய போது சிக்கினர். அதேபோல, ஐதராபாத்தில் சிண்டிகேட் வங்கி காசாளர் கைது செய்யப் பட்டார்.

நாடு முழுவதும் பல இடங்களில், வங்கி அதி காரிகள், இந்தமுறைகேடு தொடர்பாக கைதாகி உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், புதுச்சேரியில் உள்ள மாநில கூட்டுறவு வங்கி யில், விடுமுறை தினத்தில் வங்கியை திறந்து, பணத்தைஎடுத்தது தொடர்பாக, நான்கு பேர் சிக்கியுள்ளனர்.

இந்த புகார்களுக்கு வலு சேர்க்கும் விதமாக, ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக, அரசு வங்கிகளின் அதிகாரிகள், 27 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்; ஆறு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை ரிசர்வ் வங்கிக் கிளை யிலும், இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருப்
பதாக, புகார் எழுந்துள்ளது. இப்புகார் தொடர்பாக விளக்கம் பெற,ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரியை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சி களுக்கு, பலன் கிடைக்கவில்லை.


இதுகுறித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சிலர் கூறியதாவது:


சென்னை, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள, சில கறுப்பு ஆடுகளால், ஏராளமான ரூபாய் நோட்டுகள், கமிஷன் அடிப் படையில், மாற்றப்பட்டு வருகின்றன. அவர்கள், செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளதால், அதிகாரிகளால் தட்டிக் கேட்க முடிவதில்லை.

அத்தகைய கறுப்பு ஆடுகளின் கார்களில், புதிய பணம் வெளியே கொண்டு செல்லப்படுகிறது.
இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க வேண்டும்.கடந்தசில ஆண்டு களுக்கு முன், இங்கு ஒரு கும்பல், சில்லரை நாணயங்களை, மூட்டை மூட்டை யாக, கமிஷன் அடிப்படையில் விற்றது, மும்பை வரை எட்டியது. அதனால், நாடு முழு வதும் சில்லரை நாணயங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அப்பெருமை, சென்னை கிளைக்கு உண்டு.

நவ., 8ம் தேதியில் இருந்து, ரிசர்வ் வங்கி மற் றும் வர்த்தக வங்கிகளில் மாற்றப்பட்ட தொகைக்கு, உரிய ஆவணங்கள் பெறப்பட்டதா என்பதை கண்டறிய, தணிக்கை நடத்த வேண்டும். இதனால், அரசின் முயற்சிகளை சீர் குலைக்கும், கறுப்பு ஆடுகளுக்கு பயம் ஏற்படும்; மக்களின் சிரமம் குறையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


வங்கி ஊழியர்கள் 4 பேர் 'டிஸ்மிஸ்'


செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை, அவகாசம்
தரப்பட்டு உள்ளது. இந்த நோட்டுகளை சட்ட விரோதமாக மாற்றித் தரும், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக, நாடு முழுவ தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, அகாலி தளம் ஆட்சி நடக்கும், பஞ்சாப் தலைநகர், சண்டிகரில் உள்ள, எச்.டி.எப்.சி., வங்கி கிளை ஒன்றில், முறைகேடாக செல்லாத ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுவதாக புகார் எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய, வங்கி நிர்வாகம், கிளை மேலாளர் உள்ளிட்ட, நான்கு
ஊழியர்களை, அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம், பதிண்டாவில் உள்ள பொதுத் துறை வங்கி கிளையில், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர, கட்டணம் வசூலித்த, மேலாளர் மற்றும் காசாளரை, நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...