தலைநகர் மண்டலத்தில் ஜனவரி 1 முதல் அமல் : ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !!

தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் டெல்லியில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் கப்கள், தட்டுகள், ஸ்பூன்கள் போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி

சுகதேவ் விஹார் குடியிருப்போர் நலச் சங்கம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.அதில் ஓக்லாவில் செயல்பட்டு வரும் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பிரிவு, சிறந்த முறையில் பொருட்களை எரித்து காலாவதியான ெதாழில் நுட்பத்தை பயன்படுத்தி வருவதாகவும், இதை மூட உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. இதை நீதிபதி சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது அது கூறியதாவது: தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு வரும் வரை ஓக்லா மின்னுற்பத்தி பிரிவு செயல்படலாம். காஸிபூர், பாலாஸ்வா மின்னுற்பத்தி நிலையங்களும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும். சுற்றுச் சூழல் சீர்கேட்டை தடுக்க பல நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடுகிறோம். டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசு எடுக்க வேண்டும். வடக்கு, தெற்கு, கிழக்கு மாநகராட்சிகள், டெல்லி மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட பொது அமைப்புகள் குப்பைகள் சேருவதை குறைக்கவும், ேசர்ந்தவற்றை மீள் சுழற்சி முறையில் பயன்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஓக்லா, காஸிபூர், பால்ஸ்வா ஆகிய மூன்று குப்பை கொட்டும் இடங்களும் சுகாதார சீர்கேடாக உள்ளது. மக்களின் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக மூத்த விஞ்ஞானி , ஐஐடி பேராசிரியர் ஆகியோர் அடங்கிய குழு இரு மாதத்துக்கு ஒருமுறை இந்த மூன்று மின்உற்பத்தி மையங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளும். ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்படுகிறது. இவை காற்று மாசு தடை சட்டம், திடக் கழிவு மேலாண்மை விதிகள் (2016) படி செயல்பட வேண்டும். இதை கடைபிடிக்க தவறினால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் காய்கறி கழிவுகளை வீசி எறியும் வியாபாரிகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். சாஸ்திரி பூங்கா கழிவு சுத்திகரிப்பு ஆலை 6 வாரத்துக்குள் செயல்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க டெல்லி அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த ஆலைகள் தரும் கழிவுகளை சாலைகளில் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஒப்பந்த புள்ளிகளில் சேர்க்க வேண்டும். இதை டெல்லி அரசு கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு என்ஜிடி உத்தரவிட்டுள்ளது.

* பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு 2017 ஜனவரி 1ம் தேதி முதல் அமலாகிறது.
* கழிவுப் பொருள் மேலாண்மை திட்டத்தை மேம்படுத்துமாறு டெல்லி, தலைநகர் மண்டலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

* கழிவில் இருந்து மின் உற்பத்தி செய்யப்படும் ஓக்லா மின் உற்பத்தி நிலையத்தை மூடும் கோரிக்கையை ஏற்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...