இன்று நடைபெறவிருந்த 50,000 திருமணங்கள் தள்ளிவைப்பு!!

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இன்று நடைபெற இருந்த 50,000க்கும் மேற்பட்ட திருமணங்கள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக நாட்டில் நிலவி வரும் பணத்தட்டுப்பாட்டால் மக்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகின்றன. .அதன்படி தங்கள் பிள்ளைகளுக்குச் சிறப்பாக

திருமணம் நடத்த வேண்டும் என்று ஏற்பாடு செய்த திருமணங்கள் குறைந்த செலவில் நடைபெறுகிறது அல்லது திருமணத் தேதிகள் தள்ளி வைக்கப்படுகிறது

திருமணத்துக்காக வங்கியில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதற்கும் சில முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் அந்த ரூபாய் இரண்டரை லட்சத்தை கூட எடுக்க முடியாமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். இதுமட்டுமின்றி மத்திய அரசு குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களைச் சமர்ப்பித்தாலும் வங்கியில் ஏற்ப்பட்ட பணத்தட்டுப்பாட்டால் முழுமையாக ரூ.2.5. லட்சத்தையும் எடுக்க முடிவதில்லை என பொதுமக்கள் குற்றம் கூறுகின்றனர்.

இந்நிலையில் திருமணம் நடத்த செலவுக்கு பணமில்லாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆசையாக நடத்த இருந்த திருமணத்தை வேறு தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். பெரும்பாலான திருமணங்கள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று தெலங்கானா மற்றும் ஆந்திராவில் மட்டும் இன்று நடைபெற இருந்த 50,000க்கும் மேற்பட்ட திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட திருமணங்கள் இன்று நடக்க இருந்தன. இதில் பெரும்பாலான திருமணங்கள் அடுத்த வருடத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேறு நல்ல தேதி குறித்து தருமாறு கேட்டு தன்னிடம் வந்ததாக அம்மாநில ஜோசியர் வேணு சுவாமி என்பவர் தெரிவித்துள்ளார். ஆனால், சில திருமணங்கள் வெறும் ரூபாய் 5௦௦இல் நடப்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...