பெட்ரோல் விற்பனை நிலையங்கள், விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.500 பழைய நோட்டுகளை நாளை முதல் பயன்படுத்த முடியாது கால அவகாசத்தை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு.
பெட்ரோல் விற்பனை நிலையங்கள், விமான டிக்கெட்டுகளுக்கு பழைய ரூ.500 நோட்டுகளை நாளை (சனிக்கிழமை) முதல் பயன்படுத்த முடியாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.15–ந்தேதி வரை அவகாசம்
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8–ந்தேதி அறிவித்த மத்திய அரசு, இந்த நோட்டுகளை மாற்றுவதற்கான சில வழிமுறைகளை அப்போது அறிவித்தது. அதன்படி பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பஸ், ரெயில், விமான போக்குவரத்துக்கான டிக்கெட்டுகள், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அரசின் கட்டணங்கள், செல்போன் கட்டணம், பள்ளி கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு இந்த நோட்டுகளை பயன்படுத்தலாம் என கூறப்பட்டு இருந்தது.இதற்கான கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த மாதம் 24–ந்தேதி வரை இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என கூறப்பட்டு இருந்தது. பின்னர் இது வருகிற 15–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டதுடன், மேற்கூறப்பட்ட தேவைகளுக்கு ரூ.500 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.கருப்பு பணத்தை மாற்றுவதற்கே...
இந்த நிலையில் எங்கெல்லாம் பழைய நோட்டுகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளதோ, அங்கெல்லாம் சிலர் தங்கள் பழைய நோட்டுகளை புதிதாக மாற்றுவதற்கே பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வரும் புதிய நோட்டுகள் வங்கிகளுக்கு செல்லாமல், ஒரு சிலரின் கருப்பு பணத்தை மாற்றுவதற்கே சென்றுவருவதாக கண்டறியப்பட்டு உள்ளது.எனவே பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பழைய நோட்டுகளை மாற்றும் கால அவகாசத்தை இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்று செயல்படும் பெட்ரோல், டீசல், கியாஸ் விற்பனை நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) முதல் பழைய ரூ.500 நோட்டுகளை மாற்ற முடியாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.சுங்கச்சாவடிகளிலும் கொடுக்க முடியாது
மேலும் கவுண்ட்டர்களில் எடுக்கப்படும் விமான டிக்கெட்டுகளுக்கும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் நாளை முதல் பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த முடியாது என கூறப்பட்டு உள்ளது.முன்னதாக நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்து இருந்த மத்திய அரசு, இதற்காக நாளை முதல் பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது. ஆனால் இந்த அறிவிப்பும் தற்போது வாபஸ் பெறப்பட்டு உள்ளது.பழைய நோட்டுகளை பயன்படுத்தலாம்
எனினும் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள், அரசு மற்றும் பொதுத்துறை பஸ் டிக்கெட் கவுண்ட்டர்கள், தண்ணீர், மின்சார கட்டணங்கள் உள்ளிட்ட ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த தேவைகளுக்கு வருகிற 15–ந்தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.