இதுவரை வங்கிகளுக்கு வந்த கள்ள நோட்டின் மதிப்பு என்ன தெரியுமா???

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு பொதுமக்களிடம் இருந்து சுமார் 9 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதாவது, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டாக பெற்ற பணத்தில் ரூ.9,63,56,000 மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில், 1000 ரூபாய் நோட்டுகள் 53,046ம், 500 ரூபாய் நோட்டுகள் 86,621ம் வந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 9 கோடியே 63 லட்சத்து 56 ஆயிரம் ஆகும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...