தமிழகத்தில் எத்தனை ‘ஸ்கேன்’ மையங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி???

சென்னை,தமிழகத்தில் உள்ள எத்தனை ‘ஸ்கேன்’ மையங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்? எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்தார்கள்? என்ற விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆஜராகவேண்டும்கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்பதை பரிசோதித்து கூறியதாக நெய்வேலியைச் சேர்ந்த டாக்டர்

ராமச்சந்திரன் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை டாக்டர் தொழில் செய்யக்கூடாது என்று ராமச்சந்திரனை இடைநீக்கம் செய்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் ராமச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.ராஜினாமாஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல், ‘தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவரின் பதவிகாலம் ஏற்கனவே முடிந்து விட்டது. இடைக்கால தலைவராக பதவி வகித்தவரும் டிசம்பர் 1-ந் தேதி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் வருகிற 5-ந் தேதி தான் பொறுப்பேற்க உள்ளார்’ என்று கூறினார்.கண்டனம்இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ‘தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் நேரில் ஆஜராகவேண்டும் என்று நவம்பர் 30-ந் தேதி உத்தரவிட்டேன். ஆனால், அடுத்த நாளே, அதாவது டிசம்பர் 1-ந் தேதி அவர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்று கூறினால் என்ன அர்த்தம்? மருத்துவ கவுன்சில் ஏன் இவ்வளவு அலட்சியமாக செயல்படுகிறது? சரி தலைவர் ராஜினாமா செய்துவிட்டார் என்றால் கவுன்சில் சார்பில் வேறு யாரும் ஆஜராக மாட்டார்களா? என்று கேட்டார்.பின்னர், தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எத்தனை ‘ஸ்கேன்’ மையங்கள் உள்ளன? அது போன்ற மையங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எத்தனை முறை சோதனை செய்தனர்? எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்தனர்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘100-க்கும் மேற்பட்ட மையங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரர் ராமச்சந்திரன் மீது மட்டும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.இதையடுத்து நீதிபதி கூறியதாவது:-தாயின் எண்ணம்தமிழகத்தில் ஏராளமான ஆஸ்பத்திரிகள், ‘ஸ்கேன்’ மையங்கள் உள்ளன. ஆனால், 100 சோதனைகள் தான் நடந்துள்ளது. அதிலும், ஒருவர் மீது மட்டும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றால் என்ன அர்த்தம்? அரசு அதிகாரிகள் முறையாக, திறமையாக செயல்படவில்லை, அலட்சியமாக செயல்படுகின்றனர் என்று தானே அர்த்தம்? சிசு ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்துக்கொள்ள பலர் விரும்புகின்றனர். வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். பெண்ணாக இருக்கக்கூடாது என்று கருவுற்ற தாயே நினைக்கும்போது என்ன செய்ய முடியும்?திடீர் சோதனைகள்கடந்த 10 ஆண்டுகளில் கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை சட்ட விரோதமாக தெரிவித்த ஸ்கேன் மையங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஸ்கேன் மையங்களில் எத்தனை முறை திடீர் ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்? யார் அந்த அதிகாரிகள்? சோதனை செய்யப்பட்ட ஸ்கேன் மையங்களின் பெயர், முகவரி என்ன? எத்தனை பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்?இதுபோன்ற சோதனையில், தமிழக சுகாதாரத் துறையும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறது? இடைநீக்கம் செய்யப்பட்ட டாக்டர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? ஆகிய கேள்விகளுக்கு விரிவான பதில் மனுவை தமிழக அரசும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் 4 வாரத்தில் தாக்கல் செய்யவேண்டும்.சட்ட திருத்தம்கிரிமினல் வழக்குகளில் சிக்கிய டாக்டர்களை இடைநீக்கம் செய்திருந்தால், அந்த இடைநீக்கத்தை உடனே நீக்கவேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. எதற்காக இப்படி ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது? என்பதற்கு விரிவான விளக்கத்துடன் கூடிய பதில் மனுவை இந்திய மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்யவேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.இதன்பின்னர், இடைநீக்கத்தை எதிர்த்து டாக்டர் ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...