சென்னை நெற்குன்றத்தில் குறைந்த விலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புகழேந்தி என்பவர் ஒரு பொதுநல வழக்கை கடந்த 2012–ம் ஆண்டு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு
இருந்ததாவது:–தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சென்னை நெற்குன்றத்தில் குறைந்த விலையில் வீட்டு மனைகள் ஒதுக்கி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 2011–ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இந்த திட்டத்துக்காக நெற்குன்றத்தில் மொத்தம் 17.09 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை, ஒரு சதுர அடி ரூ.2 ஆயிரத்து 442 என்று குறைந்த விலையை நிர்ணயம் செய்து அதிகாரிகளுக்கு வழங்கி இருக்கின்றனர். ஆனால், இந்த நிலத்தின் சந்தை விலை, சதுர அடி ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகம் ஆகும்.நெற்குன்றத்தில் நில ஒதுக்கீடு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஏற்கனவே சொந்த வீடுகளை அவர்களது பெயரில் அல்லது அவர்களது மனைவி, குழந்தைகளின் பெயர் வைத்துள்ளனர். அதனால், இந்த திட்டமே முறைகேடானது. எனவே, இவர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.பதில் மனு
இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கிற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயலாளர் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துவிட்டார்.இதன் மீதான இறுதிக்கட்ட விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பாக நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:–தள்ளுபடி
முதலாளியான தமிழக அரசு, தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களின் நலனுக்காக இப்படி ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற திட்டத்தை ஏற்கனவே தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது. வீரப்பனை பிடித்த காவல்துறையினருக்கும், கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும், இதுபோன்ற திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே, அதிகாரிகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் எந்த தவறும் இல்லை.மேலும், அரசு விருப்ப உரிமை ஒதுக்கீட்டின் கீழ் ஏற்கனவே பயனடைந்த (வீடுகளை பெற்ற) 31 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு, நெற்குன்றத்தில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் தற்போது, அந்த அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை என்ற பழைய திட்டத்தின் கீழ் இந்த திட்டம் உருவாக்கப்படவில்லை. ஏற்கனவே, பயனாளிகளுக்கு சொந்த வீடு உள்ளதா? இல்லையா? என்பதை இந்த திட்டத்தின் கீழ் பரிசீலிக்க முடியாது. இருந்தாலும், இந்த வழக்கில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறி இருந்தனர்.