தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவக்கம் !!

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று அரையாண்டு தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை மறுநாள் துவங்க உள்ளது.

தமிழகத்தில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.


 இவற்றில், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவங்கள் பிரிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுகிறது.

காலாண்டு தேர்வு, முதல் பருவத் தேர்வாகவும்; அரையாண்டு தேர்வு, இரண்டாம் பருவத் தேர்வாகவும்; ஆண்டு இறுதி தேர்வு, மூன்றாம் பருவத் தேர்வாகவும் நடத்தப்படுகிறது.

இதில், இரண்டாம் பருவத் தேர்வான, அரையாண்டு தேர்வு, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இன்று துவங்குகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, டிச., 23 வரை நடக்கிறது.



பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை மறுநாளும்; 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச., 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு துவங்குகிறது. இந்த தேர்வு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

டிச., 23ல் தேர்வு முடிந்ததும், 24 முதல் ஜன., 1 வரை, விடுமுறை விடப்படுகிறது.

 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...