பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை; வதந்திகளை நம்பவேண்டாம்!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும், அத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.




சென்னை அப்பல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் உடல்நிலையைக் காரணம் காட்டி இன்று (திங்கள்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. ஆனால், இதை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மறுத்துள்ளார். அத்தகைய செய்தி வதந்தி என்றும், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...