ஆங்கிலத்தில் ஆயிரம் வார்த்தைகள் சொல்லி அசத்திய, ஆறாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் !!

திருத்தணியில் கடந்த 10/12/2016 அன்று நடந்த பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு கூட்டத்தில், வீரகநல்லூர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவர்கள், V.கண்ணன்,
P. செளந்தர்யா, மற்றும் V. மீனா என்பவர்கள் , ஆங்கிலத்தில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மேலாக கூறி
அசத்தினர். அவர்கள் தமிழில் கேட்டால் , அதற்கான பொருளினையும், எழுத்துக்களையும் கூறுவதோடு மட்டுமில்லாமல் , எப்படி கேட்டாலும் கூறி அசத்தினர். இவர்களின் வகுப்பு ஆசிரியர் திரு.V. கோபி அவர்கள், இவர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சி அளித்ததாகவும் , தங்களுடன் பணியாற்றும் மற்ற
ஆசிரியர்களும் சிறப்பாக செயல்படுவதாகவும், அவருடைய தலைமை ஆசிரியர் திரு.B. பாலாஜி அவர்கள் , அவர்களை பாராட்டினார். இவர்களையும் , இவர்கள் பள்ளி மாணவர்களையும் திரு.V. நாட்சே கவுடு , உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் பாராட்டினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...