குறிப்பிட்ட நான்கு செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என மத்திய அரசு !!

உளவுத்துறை அறிக்கைகளை தொடர்ந்து இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட நான்கு செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.



பாகிஸ்தானை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் மால்வேர் நிறைந்த செயலிகளை முக்கிய பிளே ஸ்டோர்களில் வெளியிட்டிருப்பதாகவும், இவற்றை பயனர்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் பட்சத்தில் ஹேக்கர்களால் பயனர்களின் வங்கி சார்ந்த அதிமுக்கிய தகவல்களை திருட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் Top Gun, Mpjunkie, Bdjunkie மற்றும் Talking Frog உள்ளிட்ட செயலிகளை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் துவக்கம் முதலே சைபர் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரித்து இருக்கின்றன. இத்துடன் இந்திய ராணுவ நடவடிக்கைகளை கன்காணிக்க இது போன்ற செயலிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் கூகுள் SmeshApp எனும் செயலியை உடனடியாக தடை செய்திருக்கிறது. இத்துடன் இந்திய ராணுவ வீரர்களையும் இது போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் டிஜிட்டல் வாலட் மற்றும் ஆன்லைன் பேங்கிங் சார்ந்த பயன்பாடுகள் அதிகரித்து இருக்கும் போது வெளியிடப்பட்டிருக்கும் இது போன்ற அறிவிப்பு மக்களிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் பொது மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது கூடுதல் கவனமாக இருப்பது அவசியமாகி இருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...