கோவை: மின்னணு வாயிலாக, திட்டங்களை பொதுமக்களிடம் சேர்த்ததாக, மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' விருது பெற்று, பெருமைப்படுகிறது கோவை மாநகராட்சி. தொழில்நுட்பப் புரட்சியில் மட்டும் அக்கறை
செலுத்திக் கொண்டிருக்காமல், இனியாவது களமிறங்கி, அடித்தட்டு மக்களுக்கு என்னென்ன தேவை என்பதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சி, 257 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, 100 வார்டுகளாக எல்லை விஸ்தரிப்பு செய்யப்பட்டு உள்ளது. சொத்து வரியாக ஆண்டுக்கு, 150 கோடி ரூபாயும்; குடிநீர் கட்டணம், குத்தகை, வாடகை மற்றும் இதர இனங்கள் சேர்த்து, 500 கோடி ரூபாய் வரை, வருவாய் கிடைக்கும்.
மத்திய - மாநில அரசு திட்டங்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியாக, 1,200 கோடி ரூபாய் பெறப்படும். இத்தொகையை முறையாக செலவழித்தால், நகரத்தின் வளர்ச்சி, இந்நேரம் பன் மடங்கு மேம்பட்டிருக்கும்.
ஆனால், தற்போதைய நகர வளர்ச்சிக்கேற்ப போதுமான வசதிகள் எங்கும் செய்யப்படவில்லை. எந்தவொரு திட்டமாக இருந்தாலும், கிடப்பில் போடப்பட்டு உள்ளது. திட்டங்களை முனைப்போடு செயல்படுத்துவதில், அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன், தேசிய ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், 3,250 கோடி ரூபாய் பெறப்பட்டது. இதில், உக்கடம், ஒண்டிப்புதுாரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டதை தவிர, வேறெந்த திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்தவில்லை.
பாதாள சாக்கடை திட்டத்திலும், ஒண்டிபுதுாரில் இன்னும், 5 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதிக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் அனுமதி வாங்காமல், மாநகராட்சி அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர்.
நஞ்சுண்டாபுரத்தில் மையம் அமைக்க, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்ததால், கிடப்பில் போடப்பட்டுள்ளது. கட்டுமான பணி, பாதியில் நிற்கிறது; பல லட்சம் ரூபாய் செலவழித்து வாங்கிய உபகரணங்கள், வெயிலில் காய்கின்றன. இதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், வழக்கு விசாரணையில், அக்கறை காட்டாமல் இருக்கின்றனர் அதிகாரிகள்.
இதேபோல், 'மல்டி லெவல்' பார்க்கிங் திட்டம் இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் திட்ட வரைவு திருத்தப்படுகிறது. 24x7 குடிநீர் திட்டத்துக்கான டெண்டரில், இரண்டு ஐரோப்பிய நிறுவனங்கள் பங்கேற்றன. எதையோ எதிர்பார்த்து, இன்னும் இறுதி செய்யாமல், காலதாமதம் செய்து வருகின்றனர். 'நிதி ஆதாரம் இல்லை' எனக்கூறி, பெரும்பாலான திட்டங்களை பற்றி பேசுவதே இல்லை.
மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவியோடு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பல கோடி ரூபாய்க்கு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. இதில், குளங்களை மேம்படுத்தப் போவதாகவும், 'ஸ்மார்ட்' பள்ளி உருவாக்கப் போவதாகவும், 'ஸ்மார்ட்' குப்பை தொட்டி வடிவமைப்பதாகவும் சொல்கின்றனர்.ஆனால், எதையும் உருப்படியாகச் செய்வதாக தெரியவில்லை. எந்தவொரு திட்டத்திலும், நிதி கரைகிறேதே தவிர, திட்டங்கள் கரை சேர்வதில்லை.
கோவை மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமாக, வ.உ.சி., பூங்கா இருக்கிறது; இதன் உரிமத்தை புதுப்பிப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. மத்திய வன உயிரின ஆணையத்துக்கு, 'மாஸ்டர் பிளான்' மட்டும் அனுப்பி விட்டு, துாங்குகிறது மாநகராட்சி நிர்வாகம். இப்பூங்கா இயக்குனர் பணியிடம் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளது.
'கால்நடைத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்' எனக்கூறி, சப்பைக்கட்டு காரணம் சொல்லி, அதிகாரிகள் மழுப்புகின்றனர்.எந்தவொரு திட்டத்தை பற்றி கேட்டாலும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் செய்து விடலாம் என மழுப்புகிறார்களே தவிர, உருப்படியான முயற்சிகளில், ஈடுபடுவதில்லை. அதேநேரம், பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று, விருது வாங்குவதில் மட்டுமே அக்கறை செலுத்துகின்றனர்.
மின்னணு வாயிலாக, திட்டங்களை பொதுமக்களிடம் சேர்த்ததாக, மத்திய அரசின் 'டிஜிட்டல் இந்தியா' விருதை, கோவை மாநகராட்சி பெற்றுள்ளது. இதனால், யாருக்கு என்ன பிரயோஜனம் என்பதை யோசிப்பதில்லை. முகநுால் பக்கத்திலும், 'வாட்ஸ் ஆப்'பிலும் பதிவிட்டு, 'லைக்' வாங்கினால், நகரம் மேம்பட்டுவிடுமா என்பதை அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.
'ரேங்க்' மட்டும் போதுமா?
விருது வாங்குவதில் காட்டும் அக்கறையை, சாக்கடை கால்வாய் கட்டுதல், தெருவிளக்கு அமைத்தல், ரோடு வசதி செய்தல், குப்பை அள்ளுதல், சிறு பாலம் கட்டுதல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளில் கூட, செலுத்துவதில்லை. நகரில் ரோடுகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன; குப்பை குவிந்து கிடக்கிறது. சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அபரிமிதமாக உள்ளது.
இதேபோல், எண்ணற்ற பிரச்னைகள் வியாபித்திருக்கின்றன.ஆனால், 'துாய்மை பாரதம்' திட்டத்தில், 'ரேங்கிங்' பெற அதிகாரிகள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதில், முதல் 'ரேங்க்' பெற்று விட்டால், நம்மூர் துாய்மையான நகரம் என அர்த்தமா? என்பதை சிந்தித்துப் பார்த்து, அதிகாரிகள், களப்பணி ஆற்ற வேண்டுமென்பதே, நகர மக்களின் விருப்பம்.