பிஜியின் இரண்டாவது பெரிய நகரான லடோகாவில் அமைந்துள்ள பிஜி பல்கலைக் கழகத்தில் தாகூர் மையம் துவக்கப்பட்டது.
இந்திய அரசின், ஐசிசிஆர் என்ற கலாசார பிரிவு அமைப்பு, பிஜி பல்கலையில் தாகூர் சென்டர் என்ற பெயரில் ஒரு மையத்தை அமைத்துள்ளது. இந்த மையத்தின் திறப்பு விழா டிசம்பர் 14ம் தேதி சிறப்பாக நடந்தது.
இவ்விழாவில், இந்திய தூதகர அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மையத்திற்கு இரண்டு கம்ப்யூட்டர்களையம், 110 புத்தகங்களையும் ஐசிசிஆர், புதுடில்லி வழங்கி உள்ளது.