பிரபல இருமல் மருந்து, தலைவலி மாத்திரைகள் உள்ளிட்ட 344 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த மருந்துகள் அனைத்தும் fixed dose combination என்ற வகையைச் சேர்ந்த மருந்துக் கலவை என்றும், இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து அவற்றை மத்திய அரசு தடை செய்தது.
இதனை எதிர்த்து முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அதன்பின்னர் விசாரணை நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், மத்திய அரசின் தடை உத்தரவை ரத்து செய்வதாக ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.