நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னையை தாக்கிய வர்தா புயல் நேற்று பிற்பகலில் கரையைக் கடந்தது. புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன. புயல் கரையைக் கடக்கும் போது வீசிய பலத்த காற்றால் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக் கழக அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.