புதுடெல்லி,இந்திய பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் போன்றவற்றை ஹேக்கிங் செய்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தவர்கள் நாங்கள் தான் என்று தெரிவித்துள்ள ஹேக்கிங் குழு, இந்திய வங்கிகளின்
இணையதளங்களை எளிதில் ஹேக்கிங் செய்யலாம் எனவும் எங்களின் அடுத்த இலக்கு அதுதான் என்றும் தெரிவித்துள்ளது.இணையதளம் ஒன்றுக்கு ஹேக்கிங் குழுவைச்சேர்ந்த விஷமிகள் அளித்துள்ள பேட்டியில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளனர். மேலும், ரொக்கமில்லா பரிவர்த்தனையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் இந்த குழு தெரிவித்துள்ளது. அதேபோன்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள sansad.nic.in. இணையதளம்தான் அடுத்த இலக்காக இருக்கும் எனவும் விஷமிகள் தெரிவித்தனர்.பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பத்திரிகையாளர் பர்கா தத், ரவிஷ் குமார் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து கைவரிசை காட்டியது இந்த விஷமிகள் தான் என்பது கவனிக்கத்தக்கது