புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள், அடுத்தடுத்து புழக்கத்தின் மூலம் 80 சதவீத பணம் வங்கிக்கு வந்த பிறகே பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.கட்டுப்பாடு: கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு
பணத்தை வெளிக்கொண்டு வரவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏடிஎம் மூலம் தினசரி ரூ.2,500ம் வங்கியில் செக் மூலம் ரூ.24 ஆயிரம் ரூபாயும் எடுக்கலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.தளர்வு?இந்நிலையில், மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக வெளியிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் அடுத்தடுத்து புழக்கத்தின் மூலம் 80 சதவீத பணம் வங்கிக்கு வந்த பிறகே பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
பல மாநிலங்களில் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தான் மக்கள் வங்கிகளில் காத்திருக்கின்றனர். பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முதலில், கூட்டுறவு வங்கியில் தளர்த்தப்படும். பின்னர் தான் பொதுத்துறை வங்கிகளில் தளர்த்தப்படும்.
வாபஸ் பெறப்பட்ட அளவுக்கு பணம் அச்சடிக்கப்பட மாட்டாது. முதலில் பணத்தை வங்கி நடைமுறைக்கு மாற்றப்பட வேண்டும். வங்கிளில் இது வரை 50 சதவீத புதிய ரூபாய் நோட்டு டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்ட பணம் மீண்டும் டிபாசிட் வழியாக வங்கிக்கு வந்து சேரும் என்றார்.