,ஐதராபாத்தில் உள்ள ஜெயலலிதா சொத்துக்களை தெலுங்கானா அரசு ஏற்க வேண்டும் ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஐதராபாத்தில் சொத்துக்கள் உள்ளன. அவரது உயில் ஐதராபாத்தில் மேச்சல் என்ற பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஜெ.ஜெ. கார்டன் ஐதராபாத் புறநகர் பகுதியான பேட்பஷிராபாத் பகுதியில் உள்ளது. இந்த முகவரியில் உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா தனது ரத்த சொந்தத்தில் உள்ள உறவுப் பெண் ஒருவரின் பெயரில் இந்த உயிலை எழுதி வைத்திருப்பதாக சார்பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐதராபாத் பேட்பஷி ராபாத் பகுதியில் ஜி.டி. மெட்லா, ஹோம் பள்ளி ஆகிய இடங்களில் 4 ஏக்கர், 7 ஏக்கர் பரப்பளவில் ஜெ.ஜெ. கார்டன் என்ற பெயரில் உள்ளது. இதே போல தெலுங்கு படங்களில் நடித்த போது ஐதராபாத் ஸ்ரீ நகர் காலனியில் ஒரு வீட்டையும் ஜெயலலிதா வாங்கியுள்ளார். சினிமாவில் நடித்த போது அவர் இந்த வீட்டுக்கு வந்து தங்குவதுண்டு. அரசியலில் நுழைந்த பிறகு அவர் இங்கு வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டை ஒரு தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை தெலுங்கானா மாநில அரசே ஏற்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை கரிப் கைடு அமைப்பின் தலைவர் பார்கவி தொடர்ந்துள்ளார். அதில், ஐதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளை தெலுங்கானா அரசே ஏற்று நிர்வகிக்க வேண்டும். அந்த சொத்துக்களில் யாரும் சொந்தம் கொண்டாட அனுமதிக்க கூடாது என்று உத்தர விடவேண்டும் என்று கூறிஉள்ளார். கரிப் கைடு சார்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொதுநல மனுவில் வாரிசு சட்டத்தின்படி, இந்த சொத்துக்கள் அனைத்தும் பொது சொத்துக்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவிற்கு திருமணம் ஆகவில்லை, அவருடைய பெற்றோர்கள் இப்போது இல்லை, அவருடைய ஒரே சகோதரரும் இப்போது இல்லை, இவை அனைத்தும் சட்டரீதியான வாரிசு அவருக்கு இல்லை என்பதை காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தாக்கல் செய்து இருந்த வேட்பு மனுவில் தனக்கு ரூ. 113.73 கோடி மதிப்பளவில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளது என்று குறிப்பிட்டு இருந்ததும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
[12/15, 6:07 PM] Askar,nagai: ஆண்டு வருமானம் தொடர்பாக தவறான தகவல் தெரிவிப்போர் மீது சட்ட நடவடிக்கை: மத்திய நேரடி வரிகள் வாரியம்!!
ஆண்டு வருமானம் தொடர்பாக தவறான தகவல் தெரிவிப்போர் மீது சட்ட ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வருமான வரி சட்டத்தில், வருமான வரி செலுத்துவோர் தங்களது முந்தைய ஆண்டு வருமானம் தொடர்பான கணக்குகளை திருத்தம் செய்து மீண்டும் சமர்பிக்கலாம் என்ற விதியுள்ளது. இதை வருமான வரி செலுத்துவோர்களில் சிலர் தவறாக பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது, மத்திய அரசால் கடந்த மாதம் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது, வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிலர் தங்களிடம் இருக்கும் கணக்கில் காட்டாமல் இருக்கும் கருப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய வாய்ப்பிருப்பதை புரிந்து கொண்டு, வங்கிகளில் ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக பணத்தை டெபாசிட் செய்தால், அத்தொகையில் அவர்களுக்கு 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையறிந்து கொண்டு, வருமான வரி செலுத்துவோரில் சிலர் முந்தைய ஆண்டு வருமானம் தொடர்பான கணக்குகளை தங்களுக்கு சாதகமாக திருத்தி மீண்டும் தாக்கல் செய்து வருவதாகவும், இதனால் 50 சதவீத வரிக்குப் பதிலாக 30 சதவீத வரியை அவர்கள் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு மீண்டும் தாக்கல் செய்யப்படும் ஆண்டு வருமானம் தொடர்பான திருத்தப்பட்ட கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், திருத்தப்பட்ட முந்தைய ஆண்டு வருமான கணக்குகளில் ஏதேனும் முறைகேடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது அபராதமும், சட்ட ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் 139(5)-ஆவது பிரிவில், ஆண்டு வருமானம் தொடர்பாக கணக்கை தாக்கல் செய்வோர், தங்களது முந்தைய கணக்குகளில் ஏதேனும் தகவல் விடுபட்டிருந்தாலோ அல்லது தவறான தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலோ, அதில் திருத்தம் செய்து மீண்டும் ஆண்டு வருமான கணக்கை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது