உலக சாதனை கிரிக்கெட் வீரருக்கு அவமானம்!!

பள்ளியளவிலான கிரிக்கெட் போட்டிகளில் 1009 ரன்கள் குவித்து சாதனை புரிந்த பிரனாவ் தனாவாடே போலீஸ்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார். மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டுவந்த வீரர்களை மைதானத்தைவிட்டு வெளியேறுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். உடனே

மைதானத்தை காலிசெய்யமுடியாது என்பதால் பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ள இரண்டு நிமிடங்கள் கொடுக்குமாறு கேட்டதற்கு பிரனாவ் முதற்கொண்டு அங்கிருந்த சில வீரர்களையும் போலீசார் தாக்கி மைதானத்திற்கு வெளியே இழுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டதால். சம்பவ இடத்திற்கு பத்திரிகையாளர்கள் முதற்கொண்டு அக்கம்பக்கத்தினரும் வந்துள்ளனர். பெட்டிங் வைத்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததால் தான் தாக்கினோம். இந்த சம்பவம் இங்கு பல காலமாக நடைபெறுகிறது என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால், அங்கு இருப்பவர்களுக்கு அந்த வீரர்களைப் பற்றி தெரியும் என்பதால் போலிஸ்காரர்களை மன்னிப்புக் கேட்கக் கோரியதால், அவர்கள் அந்த இடத்தைவிட்டு உடனே கிளம்பியிருக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...