பண மதிப்பிழப்பு அறிவிப்பால் ஏற்பட்டுள்ள சில்லறைத் தட்டுபாட்டைக் குறைக்கும் வகையில், தமிழ்நாட்டில் நான்குவழிச் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.5 என அச்சடிக்கப்பட்ட கூப்பன்கள், சில்லறைக்கு பதிலாகத் தரப்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு அறிவிப்பை அறிவித்தது. இதையடுத்து, மக்கள் தங்களிடமுள்ள பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகளை புதிய 2,000 நோட்டுகளாக மாற்றுவதற்கு வங்கிகளில் நேரம் பார்க்காமல் காத்துக்கிடக்கின்றனர். பணம் எடுப்பதற்கு ஏடிஎம்களில் கால் கடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்தாலும், பணம் எடுக்க முடியவில்லை. இதனால், நாட்டில் பணத்தட்டுபாடும்,சில்லறைத் தட்டுப்பாடும் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் ரூ.5 என அச்சடிக்கப்பட்ட கூப்பன்கள் சில்லறைக்கு பதிலாகத் தரப்படுகிறது. அந்த கூப்பன்களில் நான்கு வழிச்சாலை வரைபடம், பார்கோடு, மற்றும் ரூபாய் நோட்டில் உள்ளது போல வரிசை எண், இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை(என்எச்ஏஐ) என்றும், இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்தக்கூப்பன் செல்லும் என அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூப்பன் 5 ரூபாய் மதிப்பில் மட்டுமல்லாமல் ரூ, 10, ரூ. 20, ரூ.50 மதிப்பு கொண்ட கூப்பன்களும் தயாராகி வருவதாகவும், விரைவில் அவை பயன்பாட்டுக்கு வரும் எனவும் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கூறினார்.
மேலும்,இந்த கூப்பன்கள் அடுத்தடுத்த சுங்கச்சாவடிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு கேஷ்லெஸ் எக்கனாமியை உருவாக்க நினைத்தது. ஆனால், இங்கு கூப்பன்ஃபுல் எக்கனாமி உருவாகி வருகிறது என பொதுமக்கள் விமர்சிக்கின்றனர்.