கவர்னருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச வீடியோ: கூட்டுறவு பதிவாளர் பதிவாளர் சஸ்பெண்ட் !!

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி உள்ள வாட்ஸ் அப் குழுவில் ஆபாச வீடியோ அனுப்பிய புதுச்சேரி கூட்டுறவு சங்க பதிவாளர் சிவக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



உயர் அதிகாரிகளுக்காக கவர்னர் கிரண்பேடி வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கினார். இதில் கவர்னரும் உள்ளார். இந்நிலையில், இந்த குழுவில் புதுச்சேரி மாநில கூட்டுறவு சங்க பதிவாளராக இருக்கும் சிவக்குமார், தவறுதலாக ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார்.

இதனால் கவர்னர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து துறை ரீதியிலான நடவடிக்கையாக சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து அவரை கைது செய்வது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. போலீஸ் ஸ்டேசனில் இருந்த சிவக்குமாரை, அங்கு வந்த புதுச்சேரி அமைச்சர்கள் வெளியே அழைத்து சென்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...