ஆசிரியை திட்டியதால் கடத்தல் நாடகமாடிய 10-ம் வகுப்பு மாணவி !!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு 15 வயது சிறுமி அழுதுகொண்டிருந்தார்.

அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்தபோது, தன்னை 4 பேர் கடத்தி வந்ததாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்துவிட்டதாகவும் கூறினார்.


இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம்,

இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அந்த சிறுமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த சிறுமி போலீசாரிடம் கூறியதாவது:-

என் பெயர் திலகவதி, என் தந்தை பெயர் கண்ணையன், தாய் பெயர் லட்சுமி. நாங்கள் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறோம்.

அமிஞ்சிக்கரையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் 10-வகுப்பு படித்து வருகிறேன். நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றேன்.

அரும்பாக்கம் பஸ்நிறுத்தத்தில் நான் நின்று கொண்டிருந்தபோது என் அருகே சிவப்பு நிற கார் வந்து நின்றது. காரில் டிரைவர் மற்றும் 3 பேர் இருந்தனர். அவர்கள் திடீரென்று கீழே இறங்கினர்.

என் முகத்தில் வெள்ளை நிற கைக்குட்டையால் அமுக்கினர். இதில் நான் மயக்கம் அடைந்தேன். உடனே என்னை காரில் ஏற்றிக்கடத்தி சென்றனர். இரவு 8 மணியளவில் ஒரு இடத்தில் கார் நின்றது.

அப்போது எனக்கு மயக்கம் தெளிந்தது. நான் விழித்து பார்த்தபோது காரில் மேலும் 4 பெண்கள் இருப்பதை பார்த்தேன்.

காரில் என்னை கடத்தி வந்தவர்கள் காரில் இருந்து இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்க சென்றனர். உடனே நான் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவந்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார். போலீசார் அவரிடம் கடத்தி வந்த காரின் எண்ணை கேட்டனர். அதற்கு அவர் தெரியாது என்றார்.

மேலும் 4 பெண்கள் அந்த காரில் கடத்தப்பட்டதாக கூறினார். உடனே போலீசார் அவர் கூறியதை நம்பி அனைத்து பகுதிகளிலும் அந்த காரை பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

ஆனால் சந்தேகப்படுபடியாக எந்த காரும் சிக்கவில்லை.

பின்னர் திலகவதியிடம் கூடுதலாக விசாரணை நடத்த அனைத்து மகளிர் போலீசில் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

அவரிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரிடமிருந்த பஸ் டிக்கெட்டுகளை பெண் போலீசார் கைப்பற்றினர்.

அந்த டிக்கெட்டு குறித்து விசாரித்தபோது, சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுவைக்கு அவர் பஸ்சில் வந்ததும், அங்கிருந்து சேத்தியாத்தோப்புக்கு வந்திருப்பதும் தெரியவந்தது.

அவர் காரில் கடத்தப்படவில்லை என்றும், காரில் மர்மமனிதர்கள் கடத்தியாக நாடகமாடியதும் தெரிந்தது.

தொடர்ந்து திலகவதியிடம் விசாரித்தபோது சரியாக படிக்காததால் பள்ளி ஆசிரியை திட்டியதால் கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறி சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பாளையசேந்தங்குடி பகுதியை சேர்ந்த தன் மாமாவை பார்ப்பதற்காக பஸ்சில் வந்ததாக கூறினார்.

இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இரவு 11 மணியளவில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

அவர்களிடம் திலகவதியை போலீசார் ஒப்படைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...