கோவையில், எஸ்பிஐ வங்கியின் நடமாடும் வீட்டு வசதி கடன் வழங்கும் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி கோவை நிர்வாக அலுவலகத்தின் துணை பொதுமேலாளர் ரமேஷ் கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்த திட்டம் மூலம், கடன் தேவைப்படும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நடமாடும் வேன் மூலம் நேரில் சென்று,
வீட்டு வசதி கடன் வழங்கப்படுகிறது. 2017 பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டு வசதி கடன் வழங்கப்படும். இந்த வேன்களில் பொருத்தப்பட்டுள்ள பி.ஓ.எஸ். மெஷின்மூலம் புதிய மற்றும் பழைய வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கப்படும். எஸ்.பி.ஐ வீட்டுக்கடன் நன்மைகள் பற்றி விளக்கப்படும். மற்ற நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட கடன்களை பாரத ஸ்டேட் வங்கிக்கு மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.