ரயில்வே தேர்வு - ஆதார் எண் கட்டாயம்!

ரேஷன் பொருட்களை வாங்க ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்த காரணத்தால், ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ரேஷன் கடைகளில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் மின்னணு பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



இந்நிலையில், ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஆதார் எண்ணை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அனைத்து விதங்களிலும், அரசு பணிகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதன்படி, மத்திய அரசின் நுழைவுத்தேர்வான, ஜேஇஇ மற்றும் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியம் நடத்தும், பணியாளர் நியமன தேர்வுகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ’அடுத்து அறிவிக்க உள்ள, ரயில்வே வாரிய தேர்வுகளுக்கு, விண்ணப்பதாரர்கள், ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அதற்கு இப்போதே, ஆதார் எண் பெற்றுக்கொள்ள வேண்டும்' என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அரசு தேர்வுத்துறை இயக்ககம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது, கட்டாயமாக மாணவர்களின் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத முடியும் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதார் அட்டை முதல் கட்டமாக வழங்கப்பட்ட போது, அரசின் சலுகைகளைப் பெறவோ, வேறு அரசு விஷயங்களுக்கோ ஆதார் கட்டாயமாக்கப்படாது என மத்திய அரசு குறிப்பிட்டது. ஆனால், இப்போது அரசு சார்ந்த ஒவ்வொரு விஷயங்களிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...