மெட்ரிக் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வைத்த 'மாஸ் காப்பியிங்' முறைகேடு... அதிர்ச்சியில் மாணவர்கள்!


நூறு சதவீத தேர்வு, 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள், மாநில அளவில் முன்னிலை, மருத்துவம், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கில் முன்னிலை என சில தனியார் பள்ளிகளே தொடர்ச்சியாக சாதனை படைக்க சொல்லப்படும் காரணங்களில் முதன்மையானது ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பது. அடுத்து 'மாஸ் காப்பியிங்'.


தனியார் பள்ளிகளில் ‘மாஸ் காப்பியிங்’ அடிப்பதன் மூலம் தான் அதிக மதிப்பெண்கள் பெற முடிகிறது. ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பது, காப்பி அடிப்பது ஆகிய காரணங்களால் தான் சில மாணவர்கள் மட்டும் 200/200 என மார்க் பெற்று மருத்துவம், பொறியியல் படிக்கின்றனர் என சொல்லப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மாஸ் காப்பியிங் முறை நடக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படாமலே இருந்த நிலையில் ஈரோட்டில் உள்ள ஐடியல் மற்றும் ஆதர்ஷ் தனியார் மெட்ரிக் பள்ளியில் மாஸ் காப்பியிங் நடப்பதாக புகார் கிளம்பி, அது உறுதிப்படுத்தப்பட்டு இப்போது பள்ளியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இயங்கி வரும் இந்த ஐடியல் மற்றும் ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளில் இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிப்பது வழக்கம். தமிழகத்தில் பிரபலமான பள்ளிகளில் இந்த பள்ளிகளுக்கு முக்கிய இடம் உண்டு.
இந்த பள்ளியில் மாணவர்கள் பொதுத்தேர்வில் 'மாஸ் காப்பிங்' எனப்படும் பிட் அடிக்கும் முறைக்கேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் கிளம்பியது. இதையடுத்து கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வின் போது தற்போதைய மெட்டிக்குலேசன் இயக்குநர் கருப்பசாமி இந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆதர்ஷ் என்ற மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பிட் அடிப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகிய பாடங்களில் இதே பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள் 200க்கு 200 மார்க் பெற்றிருப்பதும், அந்த விடைத்தாள்களில் கையெழுத்துகள் ஒரே மாதிரி இருப்பதை அரசுத்தேர்வுத்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். அதாவது 5 மாணவர்களின் தேர்வையும் ஒரே மாணவர் எழுதி இருந்தது உறுதியானது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் அந்த பள்ளியில் பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பில் ஈடுப்பட்ட அரசு பள்ளி தலைமையாசிரியர் நசீர் உள்பட 4 அரசு ஆசிரியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஈரோடு ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மையத்திற்கான அங்கிகாரத்தை ரத்து செய்ய தேர்வுத்துறை இயக்குநர் வசுந்த்ராதேவி முடிவு செய்து அதற்கான உத்தரவை கடந்த வாரம் அந்த பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...