அரசியல் கட்சிகளுக்கு வரி விலக்கு!

அரசியல் கட்சிகள், தங்களது வங்கிக் கணக்குகளில் செலுத்துகிற பணத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று, மத்திய வருவாய்த்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 8ஆம் தேதி, இந்தியாவில் புழக்கத்திலிருந்த மொத்த பணமதிப்பில் 86 சதவிகிதமாக இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பதாக
அறிவிக்கப்பட்டது. மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும், புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்கும் விதிமுறைகளோடு கூடிய அறிவிப்புகள் வெளியாயின. தற்போது வரை, வங்கிகளை வந்தடைந்துள்ள மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.12,44,000 கோடி.

இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வங்கிக் கணக்குகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தால், அந்த தொகைக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுமென்று மத்திய வருவாய்த்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் பேசுகையில், ‘அரசியல் கட்சிகளின் வருவாய்க்கு, வருமான வரிச் சட்டம் 13-ஏ பிரிவின்கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கட்சிகளினுடைய வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் பணம் நன்கொடையாகவோ அல்லது வேறு ஏதேனும் வருவாய் மூலம் கிடைத்ததாகவோ இருக்கலாம். ஆனால் இந்தச் சலுகை தனி நபருக்கு கிடையாது’ என்று கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...