ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், டீன்
அலுவலகத்தை முற்றுகையிட்டு, செவிலியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, வண்ணாரப்பேட்டையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, துப்புரவு பணியில், தனியார் நிறுவனத்தை சேர்ந்த
ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், மருத்துவ கழிவு கள், குப்பையை சரிவர அகற்றுவதில்லை; கழிப்பறைகளை சரியாக சுத்தம் செய்வதில்லை என, கூறப்படுகிறது.
இதனால், துப்புரவு ஊழியர்களுக்கும், செவிலியர்களுக்கும் இடையே, வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டான்லி அறுவை சிகிச்சை பிரிவான, எட்டாவது மாடி கட்டடத்தில், குப்பை அகற்றப்படாமல் தேங்கி இருந்துள்ளது.
இதில், செவிலியர்களுக்கும், துப்புரவு ஊழியர்களுக்கும் இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. துப்புரவு ஊழியர்கள், செவிலியர்களை கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளனர். கோபமடைந்த
செவிலியர்கள், 150க்கும் மேற்பட்டோர், டீன்
அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நிலைய மருத்துவ அலுவலர்,
செவிலியர்களிடம் சமரசம் பேசியதை அடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.