காவிரி நீர் இருப்பு குறித்த தகவலை தர, கர்நாடக அரசு மறுப்பதால், தமிழக பொதுப்பணித் துறையினர் தவித்து வருகின்றனர்.
'கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் தேக்கப்படும் காவிரி நீரை, தமிழகத்திற்கு வழங்க வேண்டும்;
ஆண்டுக்கு, 192 டி.எம்.சி., நீரை, கர்நாடகா வழங்க வேண்டும்' என, காவிரி நடுவர் மன்றம், இறுதி தீர்ப்பில் கூறியுள்ளது.
ஆனால், நீரை முறைப்படி வழங்காமல், கர்நா டகா முரண்டு பிடித்து வருகிறது. தமிழக தேவை க்கு, நாள்தோறும் வினாடிக்கு, 2,000 கன அடி நீர் திறக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவையும், கர்நாடகா கண்டு கொள்ள வில்லை. நான்கு அணைகளிலும்
போதிய நீர் இருப்பு இல்லை எனக் கூறி, தமிழகத் திற்கு தண்ணீர் தர, கர்நாடகா மறுத்து வருகிறது.
கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்புவிபரங் களை, தமிழக பொதுப்பணித் துறையினர் கண் காணித்து வருகின்றனர்.இதுகுறித்த அறிக்கை, நாள் தோறும், முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரி கள் உள்ளிட்ட, 17 அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சென்னை, சேப்பாக்கம் பொதுப்பணித் துறை வளா கத்தில், இதற்கான அலுவலகம், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. ஆனால், கர்நாடக நீர்வள துறை இணையதளத்தில், 2ம் தேதி முதல், இத்தகவல்கள் வெளியிடுவதை நிறுத்தி விட்டனர்.
இது மட்டுமின்றி, தமிழக அதிகாரிகள் கேட்கும் தகவல்களை தரவும்,கர்நாடக அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதனால், அரசுக்கு உரிய நேரத்தில் அறிக்கை அனுப்ப முடியாமல், பொதுப்பணித் துறை யினர் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கர்நாடக அணைகளில் இருந்து, வினாடிக்கு, 900 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.
அதிகாரப் பூர்வமாக இதை வெளியிட்டால், அதனடிப்படை யில், தமிழக அரசால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதற்கு இடம் தரக்கூடாது என்பதற்காகவே, நீர் இருப்பு, வெளி யேற்றம் உள்ளிட்ட தகவல்களை தர, கர்நாடக அதிகாரிகள் மறுக்கின்றனர்.
இவ்விவகாரத்தில், காவிரி தொழிற்நுட்ப பிரிவு அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.