சென்னையில் ரூ.2,500 கோடி செலவில் 2-வது விமான நிலையம் !!

சென்னையில் ரூ.2,500 கோடி செலவில் 2-வது விமான நிலையம்; விமான போக்குவரத்து துறை செயலாளர் தகவல்.


சென்னையில் ரூ.2,500 கோடி செலவில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும்” என்று விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என்.சவுபே தெரிவித்துள்ளார்.கலந்தாய்வு கூட்டம்


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா இடங்களை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என். சவுபே தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், ஆர்.டி.ஓ. சுரேஷ், நகராட்சி ஆணையாளர் சரவணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என். சவுபே நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஹெலிகாப்டர் சேவை

கொடைக்கானலை பொறுத்தவரை அவ்வப்போது குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளேன். இங்குள்ள ஏரியின் அருகில் மீன் பண்ணை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது ஏற்புடையது அல்ல. அத்துடன் ஊற்று தண்ணீர் வரும் வழித்தடங்களை அடைத்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார் உள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சாத்தியக் கூறு குறைவாகவே உள்ளது. மேலும் அதற்கான கட்டணமும் சற்று கூடுதலாக இருக்கும்.சென்னையில் 2-வது விமான நிலையம்இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் 30 கோடிக்கு மேல் உள்ளனர்.

ஆனால் சுமார் 8 கோடி மக்களே விமான சேவையை பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம் பல்வேறு நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்படவில்லை. சில நகரங்களில் விமான ஓடுதளம் மட்டுமே உள்ளது.

இதனை மேம்படுத்த ரூ.4 ஆயிரத்து 500 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் விமான சேவையை பயன்படுத்தாததற்கு கட்டணம் கூடுதலாக இருப்பதே காரணமாகும்.

இதையடுத்து சிறிய நகரங்களில் தனியார் நிறுவனங்களை விமான சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயண கட்டணமாக ரூ.2 ஆயிரத்து 500 மட்டுமே பயணிகளிடம் வசூலிக்க வேண்டும். மீதி தொகையை அரசு மானியமாக வழங்கும்.

இதன் மூலம் விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதே போல் ரூ.2,500 கோடி செலவில் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...