உதவித்தொகைக்காக நடத்தப்படும், தேசிய திறன் திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பு குறித்து மதுரையில், மாணவர்களுக்கு தெரிவிப்பதில் தொடக்க கல்வி அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் ’தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வு’ நடத்தப்படுகிறது. இத்தேர்விற்கு பெற்றோரின் ஆண்டு வருவாய் ஒன்றரை லட்சம் ரூபாய்க்குள் உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண் அடிப்படையில் 250 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பிளஸ் 2 வரை ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை அளிக்கப்படும். ’இந்தாண்டு ஜன.,22ல் நடக்கும் தேர்வுக்கு, டிச.,14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்,’ என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடைசி தேதிக்கு சில நாட்களே உள்ள நிலையில் பல பள்ளிகளுக்கு இத்தகவல் தெரியவில்லை. இதற்கு காரணம் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் உரிய முறையில் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
என்.எம்.எம்.எஸ்., தேர்வு அறிவிப்பு வெளியான உடன் மாவட்டந்தோறும் ’யூசர் ஐ.டி.,’ மற்றும் ’பாஸ்வோர்டு’ எண் விவரம் தெரிவிக்கப்படும். இத்தகவல் தொடக்க கல்வி அதிகாரி, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளால் தலைமையாசிரியருக்கு தெரிவிக்க வேண்டும்.
மாணவர்கள் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கடைசி தேதி டிச.,14 என்ற நிலையிலும் இதுவரை 90 சதவீதம் பள்ளிகளுக்கு இத்தகவல் நேற்று வரை தெரியவில்லை. கடந்தாண்டும் இந்நிலை இருந்தது.
தேர்வு தொடர்பான ’இமெயில்’ தகவலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த பின் தான் அதிகாரிகளுக்கு தெரிந்தது. தொடக்க கல்வித்துறையில் தான் இப்பிரச்னை ஏற்படுகிறது. இதை தவிர்த்து தகுதியுள்ள மாணவர் அனைவரும் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்