மதுரை ரிங் ரோட்டை, நான்கு வழிச்சாலையாக மாற்ற உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மேலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நெடுங்குளம், அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி ரோடுகளை இணைக்கும் வகையில், 27.2 கி.மீ., க்கு அமைக்கப்பட்ட மதுரை ரிங் ரோடு,
இருவழிச்சாலையாக உள்ளது. இச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற கோரி, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்தார். இச்சாலையின் பராமரிப்பில், மாநகராட்சி அலட்சியம் காட்டுவதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் நிர்வாக பொரியாளருக்கு
உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறையையும் சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.